2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலைதளங்கள் ஹேக்?

251

இந்தியாவில் உள்ள 2 ஆயிரத்திற்கும் கூடுதலான வலைதளங்களை இந்தோனேசியா, மலேசியா ஹேக்கர் குழுக்கள் ஹேக்கிங் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் குவிந்தன. அதன் ஒரு பகுதியாக இந்தியா மீது இணையதள தாக்குதலும் நடத்தப்பட்டு உள்ளது.

நாட்டில் உள்ள 2 ஆயிரத்திற்கும் கூடுதலான வலைதளங்களை இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து செயல்படும் ஹேக்கர் குழுக்கள் ஹேக்கிங் செய்துள்ளன. இதனை குஜராத் போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இதனை தொடர்ந்து, அகமதாபாத் குற்ற பிரிவு போலீசார், மலேசியா மற்றும் இந்தோனேசிய அரசாங்கங்களுக்கும், இன்டர்போல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உள்ளதுடன், இரு ஹேக்கர் குழுக்கள் மீது லுக்-அவுட் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கும் படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது.