உடல் பருமன் பாதிப்புகளால் அவதிப்பட்டு வருபவர்கள் உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பார்கள். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் சில பழக்கங்கள் அவர்களது எடையை அதிகரிக்க செய்து விடும். அது என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
டிவி அல்லது ஃபோனை பார்த்துக் கொண்டே சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இதனால் நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறோம்.
Also Read : உடல் எடையை குறைக்க ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க!
இரவில் தூங்குவதற்கு முன்பாக நொறுக்கு தீனி எடுத்துக் கொள்வது தூக்கத்தை பாதிப்பதுடன் இன்சுலின் அளவையும் அதிகரிக்க செய்கிறது. 6-7 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கும் போது பசி தொடர்பான ஹார்மோன்கள் பாதிக்கின்றன.
மன அழுத்தம் ஏற்படும் போது நம்மில் பலர் அதிகமாக சாப்பாடு எடுத்துக் கொள்வார்கள். குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகள் மீது அதிக ஆர்வம் இருக்கும். அதனை சாப்பிடும் போது உடல் எடை அதிகமாகும்.
Also Read : 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவரா நீங்கள்? இந்த பிரச்சனைகள் உங்களுக்கு வரும்
சாப்பிடும் போது உணவை நன்றாக மென்று சாப்பிடவேண்டும். வேகமாகவும், அவசரமாகவும் சாப்பிடுவது அதிக கலோரிகள் ஏற்பட்டு எடை அதிகரிக்கும்.
காலையில் காபியில் அதிக சர்க்கரை சேர்க்கல், பதப்படுத்தப்பட்ட ஜூஸ் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ளல் உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்.