ஃபேமஸ் ஆகும் குலாப் ஜாமுன் பரோட்டா!

526
Advertisement

வீச்சு பரோட்டா,சிலோன் பரோட்டா,பொரிச்ச பரோட்டா ,காய்ன் பரோட்டா னு ஆரம்பிச்சு இப்போ ரீசென்ட்டா மஞ்ச பை பரோட்டா வர பேமஸ் ஆனா ஒரு டிஷ் தான் பரோட்டா,

அப்டி பட்ட பரோட்டா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியா குலாப் ஜாமுன் பரோட்டா வந்திருக்கு.

பொதுவாக புரோட்டாவுக்கு அதிக ரசிக பிரியர்கள் உண்டு.

புரோட்டாவையும்,சால்னாவையும் சாப்பிட்டு முடித்து, இறுதியாக முட்டை கலக்கியுடன் விருந்தை முடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு.

தற்போது,சமூக வலைதளத்தில் தற்போது லேட்டஸ்ட்டாக வலம் வரும் இந்த குலோப் ஜாமூன் புரோட்டா நாம் ரசிக்கும்படியாக இல்லை.

எப்போதுமே புரோட்டாவை கார, சாரமான கிரேவி, சால்னாவுடன் சேர்த்து சாப்பிட்டு பழகிய நம்மூர் மக்களுக்கு , புரோட்டாவை இனிப்பு சுவையுடன் கலந்து கொடுத்தால் சற்று வினோதமாக இருக்கும்.

அப்படியொரு சம்பவம்தான் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நிகழ்ந்துள்ளது.

இங்குள்ள ஹோட்டல் ஒன்றில், குலோப் ஜாமூனை, புரோட்டாவில் ஸ்டஃப் செய்து வேக வைத்து, இறுதியாக ஜீரா ஊற்றி கொடுக்கப்படுகிறது.

இதற்கு சிலர் நாவில் எச்சில் ஊறினாலும் சிலர் முகம் சுளிக்க வைக்குறது .

இந்த வீடியோவிற்கு 40ஆயிரத்துக்கும் அதிகமானோர் கமென்ட் செய்யும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.