சென்னையில் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. வெயில் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் வசதிக்காக கடந்த ஆண்டைப்போல் பசுமை பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் வாகன ஓட்டிகளின் வெப்பத்தை தணிக்கும் வகையில் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை , அண்ணா நகர் , அடையாறு , வேப்பேரி , ராயப்பேட்டை உள்ளிட்ட 14 இடங்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு வாகன ஓட்டிகள் சார்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.