”நிறைய குடிச்சிட்டு வாங்க….கொஞ்சமா அழுதுட்டுப்போங்க… ”
92 வயதுப் பாட்டியின் இறுதி ஆசை

230
Advertisement

https://www.instagram.com/reel/Cb8CG3kpGJK/?utm_source=ig_web_copy_link

தன்னுடைய மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நிறைய மது அருந்திவிட்டு வாங்க…
கொஞ்சமா அழுதுட்டுப் போங்க என்கிறார் அனைத்துப் பாட்டிகளின் தலைமை
நிர்வாகியாகத் தன்னைக்கூறிக்கொள்ளும் பிரிட்டனைச் சேர்ந்த 92 வயதுப் பாட்டி.

டிக்டேக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கிராண்ட்மா ட்ரோனியாக் என்னும் பெயரில்
அழைக்கப்படும் வில்லியன் ட்ரோனியாக் மக்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக
அவ்வப்போது வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். தனது கடந்த
கால வாழ்க்கை, டேட்டிங் போன்ற அனுபவங்களை ஆலோசனையாக வெளியிட்டுப்
பெரும் வரவேற்பைப் பெற்றார்.

அந்த வகையில் தனது மறைவின்போது அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு 3 வேண்டு
கோள்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ”நீங்கள் அழலாம். ஆனால் அதிகமாக
அழாதீர். நான் உங்களை முட்டாளாக்க விரும்பவில்லை” என்றும்.
இரண்டாவது வேண்டுகோளாக, ”பல வருடங்களுக்கு முன்பே என்னைவிட்டு,
இவ்வுலகைவிட்டுப் பிரிந்துசென்ற என் இணையான பெர்த்தா இன்னும் அழைக்கவில்லை”
என்றும்

மூன்றாவதாக, ”எல்லாரும் நிறைய மது அருந்திவிட்டு வாருங்கள். என்னோடு ஒரு
புகைப்படமும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும் கூறியுள்ளார்.

அவரது இந்த வேடிக்கையான விநோதமான அறிவிப்புகள் வலைத்தளங்களில் வைரலாகி
வருகின்றன.,
முதுமையில் சோர்வடைந்துவிடாமல், மரணத்தைக்கண்டு அஞ்சாமல் கலகலப்பாக
வாழ்ந்துவரும் ட்ரோனியாக்மீது வலைத்தளவாசிகள் அன்பைப் பொழிந்துவருகின்றனர்.