Wednesday, December 4, 2024

72 ஆண்டுகளாக லைசென்ஸ் இன்றி கார் ஓட்டிய 84 வயது தாத்தா

72 ஆண்டுகளாக லைசென்ஸ் இன்றி கார் ஓட்டிய 84 வயது தாத்தாவைப் பற்றிய
தகவல்கள் இணையத்தில் பரபரக்கின்றன.

அந்த தாத்தா நம் நாட்டைச் சேர்ந்தவர் அல்ல. இங்கிலாந்தைச் சேர்ந்தவர்.

அந்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் ANPR ரக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அந்த கேமராக்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் பதிவெண்களைப்
படம்பிடித்து இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா என்று ஆன்லைனில் செக் செய்யும்.
இன்ஸ்சூரன்ஸ் செய்யப்படாத வாகனங்களாக இருந்தால் அருகிலுள்ள சோதனைச் சாவடி
போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இன்ஸ்சூரன்ஸ் இல்லாமல் ஒரு வாகனம் வந்துகொண்டிருப்பதாக
போலீசாருக்குத் தகவல் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து அங்குள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையில்
போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்குவந்த ஒரு வாகனத்தைத் தடுத்து
நிறுத்தினர்.

அதனை ஓட்டிவந்த டிரைவரிடம் இன்ஸ்சூரன்ஸ் பற்றிக் கேட்டபோதுதான் டிரைவிங் லைசென்ஸ்
இல்லாமலேயே வாகனத்தை ஓட்டிவந்தது தெரியவந்தது.

அப்புறமென்ன-…

அபராதம் விதித்ததுடன், இனிமேல் வாகனம் ஓட்டவும் தடைவிதித்துவிட்டனர்.

இதில் இன்ட்ரஸ்டிங்கான விஷயம் என்னன்னா…

1972 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் வாகனம் ஓட்டுவதற்கு லைசென்ஸ் முறை கொண்டுவரப்பட்டது.
ஆனால், இந்தத் தாத்தாவோ 1938 ஆம் ஆண்டே பிறந்து தன்னுடைய 12 ஆவது வயதிலேயே டிரைவர்
வேலைக்கு வந்துவிட்டாராம். அதேசமயம், ஒருமுறைகூட விபத்து ஏற்படுத்தியதே இல்லையாம்.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!