இனி இலவசம் கிடையாது, கட்டணம் செலுத்தணும் : GPay பயனாளர்களுக்கு அதிர்ச்சி

டிஜிட்டல் வழியாக பணத்தை பரிமாற்றம் செய்வதில் கூகுள் பே, போன் பே, பே டி.எம்., ஆகிய செயலிகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. யுபிஐயில் இலவச பரிவர்த்தனைகளை அனுபவித்து வரும் கூகுள் பே பயனர்கள் இப்போது குறிப்பிட்ட பில் பேமெண்ட்டுகளுக்கு கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

ஏற்கனவே ரீசார்ஜூக்கு ரூ.3 சேவை கட்டணமாக கூகுள் பே வசூலித்து வரும் நிலையில், மின்கட்டணம், கேஸ் கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பில் தொகையில் இருந்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரையில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News