வைரலாகும் அரசு அதிகாரியின் கையெழுத்து

286
Advertisement

அரசு அதிகாரி ஒருவரின் கையெழுத்து சமூக
வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வித்தியாசமான முயற்சிகள், சாதனைகள், சம்பவங்கள்
எல்லாம் சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு உடனே
வைரலாகப் பரவி விடுகின்றன. என்றாலும், மிக அரிதாக
அரசு அதிகாரி ஒருவரின் கையெழுத்தே வைரலாகியுள்ளது.

கையொப்பம் என்பது ஒருவரின் தனித்துவமான
அடையாளம். கையொப்பம் சரிபார்ப்பு நோக்கங்களுக்காகப்
பயன்படுகிறது. அந்த வகையில், தனது தனித்துவமான
கையெழுத்தின்மூலம் வலைத்தளவாசிகளின் கவனத்தை
ஈர்த்துள்ளார் மருத்துவக் கல்லூரி அதிகாரி.

இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள
படத்தில் கவுகாத்தி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின்
எலும்பியல் துறையின் பதிவாளரின் முத்திரை உள்ளது.

இந்த ஆண்டு, மார்ச் 4 ஆம் தேதியிட்ட அந்த ஆவணத்தை
சரிபார்த்துக் கையெழுத்திட்டுள்ள அதிகாரியின் பெயர்
என்ன என்பதை யூகிக்க முடியவில்லை.

அவரது கையெழுத்து முள்ளம்பன்றிபோல இருப்பதாக
விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன் சிரிப்பலைகளையும்
ஏற்படுத்தியுள்ளது.