கர்நாடகாவில் உள்ள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பெங்களூரில் மட்டும் 7000+ பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கர்நாடகாவின் போக்குவரத்துக் கழகங்களும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிர்த்து வருகிறது.
இந்நிலையில் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை கர்நாடக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி கர்நாடகாவில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.