குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து இயங்கும் 86 G என்ற அரசு சர்வீஸ் பேருந்து – மார்த்தாண்டத்தில் இருந்து பேச்சிப்பாறை நோக்கி செல்லும் போது -அருமனை பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் கைகாட்டியுள்ளனர்.
மாணவர்களையும் பொருட்படுத்தால் பேருந்தை நிற்காமல் சென்றுள்ளது. பேருந்து நிறுப்படும் என நினைத்து பள்ளி மாணவர்கள் பேருந்தின் பின்னால் ஓடியுள்ளனர். இந்த காட்சி அங்கிருந்த கடை ஒன்றின் CCTV காட்சியில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகளும் தற்போது சமூக வலைதளத்திலும் பரவி வைரலாகி வருகின்றன. இதற்கு பொதுமக்களும் ,சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கையும் எழுந்துள்ளது.