சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற அரசு சொகுசு பேருந்து புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பால தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு சொகுசு பேருந்து சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் அருகே புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் சாலையோர தடுப்பு சுவர் மீது பேருந்து மோதியது. இவ்விபத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முறையான பராமரிப்பு இன்றி காணப்பட்ட சொகுசுப் பேருந்து ஓட்டுனரின் தூக்க கலக்கத்தால் விபத்துக்குள்ளாகி மோதியது என கூறப்படுகிறது.