சுதந்திர தின போட்டிகளில் சூப்பரான பரிசுகள் காத்திருக்கு

134
Advertisement

ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.

இந்நிலையில், நமக்கு தினமும் பல சந்தேகங்களை தெளிவுபடுத்துவதில் இருந்து, மற்ற பரிமாணங்களிலும் பயனாக இருக்கும் கூகுள் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல போட்டிகளை அறிவித்துள்ளது.

1இல் இருந்து 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Doodle For Google 2022 போட்டிக்காக, இன்னும் 25 வருடங்களில் என் இந்தியா என்ற கருப்பொருளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Advertisement

இந்த போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு 5 லட்சம் கல்வி உதவி தொகை, 2 லட்சம் தொழில்நுட்பம் சார்ந்த பரிசு பொருட்கள், சான்றிதழ் மற்றும் பல பரிசுகள் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.

இது இல்லாமல் நான்கு குழு வெற்றியாளர்களுக்கும், இறுதி சுற்று வரை வரும் 15 நபர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

மேலும், India Ki Udaan என்ற தலைப்பில், கூகுள் தனது கலை மற்றும் கலாச்சார இணையதளத்தில், இந்தியாவின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கௌரவிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.