ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்தாண்டுக்கான தீபாவளி போனஸ் வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும். மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 வரை போனஸ் பெறுவார்கள்.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,69,439 தொழிலாளர்களுக்கு ரூ.376 கோடி ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளேன்.
வீட்டு வசதி வாரியம், குடிநீர் வாரிய தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும். மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.
பல்வேறு கூட்டுறவு அமைப்பு, நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணை தனியே வெளியிடப்படும். நுகர்பொருள் வாணிப கழக தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3000 கருணை தொகை வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.