13.05.2026; நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக திடீரென உயர்த்தியதன் எதிரொலியாக, நாட்டின் நகை சந்தையில் இன்று கடும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வரி உயர்வு காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை கடுமையாக உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் முன்கூட்டியே எச்சரித்திருந்த நிலையில், இன்று காலை தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400-க்கு விற்பனையானது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் மற்றும் நகை வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமண நிகழ்ச்சிகள் மற்றும் முதலீட்டு தேவைகளுக்காக தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.

இந்நிலையில், மாலை நேரத்தில் தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.15,000-க்கும், ஒரு சவரன் ரூ.3,200 குறைந்து ரூ.1,20,000-க்கும் விற்பனையாகியது. இதனால் காலை ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து சந்தை ஓரளவு மீண்டது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் காலை உயர்வுக்குப் பிறகு மாலையில் குறைந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.320-க்கும், பார் வெள்ளி ரூ.3,20,000-க்கும் விற்பனையாகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இன்று காலை வெள்ளி விலை ரூ.30,000 வரை உயர்ந்திருந்தது சந்தையில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

Related News

Latest News