விவசாயிகளுக்கு குட் நியூஸ்: சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு!!

தமிழக சட்டமன்றத்தில் 100 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், விவசாயிகளுக்கான கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அந்த வரம்பு ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டது.

இதன் மூலம் 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932.23 கோடி அளவிலான கடன் தள்ளுபடி வழங்க ஆணையிடப்பட்டது.

ஜூலை 31 வரை ரூ.5,267 கோடி விடுவிக்கப்பட்டு, 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய புதிய அறிவிப்பின்படி, ரூ.75,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரையும், ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 வரையும் தள்ளுபடி வழங்கப்படும்.

இதன் மூலம் 2.38 லட்சம் விவசாயிகள் கூடுதல் பயன் பெறுவார்கள். கூடுதல் தள்ளுபடியால் அரசுக்கு சுமார் ரூ.953.06 கோடி நிதிச்சுமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6,220 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News