வீட்டைப் புதுப்பித்தவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

346
Advertisement

வீட்டைப் புதுப்பித்தவருக்கு சூட்கேஸ் நிறைய பணம் கிடைத்துள்ளது வீட்டு உரிமையாளர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்திலுள்ள க்ளீவ்லேண்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி குடும்பத்தோடு இரண்டு அடுக்கு வீட்டில் வசித்துவந்தது. அந்த வீடு 1940 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது..

அந்தக் குடும்பத்தின் தலைவர் தனது வீட்டின் முதல் மற்றும் இரண்டாவது தளத்திலுள்ள பர்னிச்சர்களைப் புதுப்பித்து, அதிக வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினார்.
அதற்காக அடித்தளத்திலுள்ள சில பொருட்களைத் தூசிதட்டி எடுத்துக்கொண்டிருந்தனர் சில பணியாளர்கள்.

அப்போது அங்கு பச்சை நிறத்தில் சூட்கேஸ் ஒன்று இருப்பதைக் கண்டனர். அந்த சூட்கேஸ் கனமாக இருந்ததால், அதில் பழைய விளையாட்டு அட்டைகள் நிரம்பி இருக்கலாம் என்று கருதியுள்ளனர்.

சூட்கேஸைத் திறந்தபோது மெழுகுத்தாளில் சுற்றப்பட்ட 3 கட்டுகள் இருந்தன. அவற்றைப் பிரித்துப் பார்த்தபோது நிறைய பில்கள் இருந்துள்ளன. சில தங்கச் சான்றிதழ்களும் இருந்துள்ளன. அவற்றோடு 23 ஆயிரம் டாலர் தொகையும் கட்டுக்கட்டாக இருந்தன.

அதைப் பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போனார்கள் அந்தத் தம்பதியினர்….

இருக்காதா பின்னே……செலவை எப்படி சமாளிக்கலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தா….. அதிர்ஷ்டம் கிரவுண்ட் ஃபுளோர்ல இருந்துருக்கு…..

உங்க வீட்ல எங்க இருக்கோ….

எதற்கும் சும்மாவாவது… நீங்களும் உங்க வீட்ல ஏதாவது பழைய சூட்கேஸ் இருக்கான்னு தேடிப்பாருங்க…..

பழைய பொக்கிஷம் இருந்தாலும் இருக்கலாம்…