இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் வரும் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இன்னும் சில தினங்களில் படம் வெளியாக இருப்பதால் தமிழகத்தில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, டிக்கெட் முன்பதிவு வரும் 4 – ம் தேதி இரவு 8:02 மணிக்கு துவங்குகிறது என கூறப்படுகிறது.