Monday, February 10, 2025

ஷாக் கொடுத்த தங்கத்தின் விலை : ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்தது

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.61,960 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,745-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று மதியம் 2வது முறையாக அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.62,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 7,790க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய அரசு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ள நிலையில் இதன் தாக்கம் தங்கம் விலையிலும் எதிரொலித்துள்ளது.

Latest news