தங்கக் கொழுக்கட்டை

438
Advertisement

சமீபத்தில் குவைத்தில் உள்ள உணவகம் ஒன்றில் செய்யப்பட்ட
தங்க வடாபாவ் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.
அதைத் தொடர்ந்து தற்போது தங்கக் கொழுக்கட்டையும் பிரபலமாகி வருகிறது.

குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடித்தமான தின்பண்டம் கொழுக்கட்டை.
விழாக்காலங்களில் மட்டுமன்றி, எப்போதும் கிடைக்கும் வகையில்,
இனிப்பகங்களில் கொழுக்கட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில் உள்ள இனிப்புக் கடையில்
தங்கக் கொழுக்கட்டை செய்யப்பட்டு விற்கப்பட்டுள்ளது.
தங்க முலாம் பூசி இந்தக் கொழுக்கட்டை ஒன்றின் விலை 12 ஆயிரம் ரூபாய்.

கொழுக்கட்டையை நினைத்தாலே நாவில் உமிழ்நீர் ஊறும்.
இனி, தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டையை நினைத்தாலே
உமிழ்நீரோடு சந்தோஷமும் இழையோடும்.

தித்திப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கே பெற தங்கக் கொழுக்கட்டை சாப்பிடலாம்.