Wednesday, February 18, 2026

தங்கத்தின் விலை 229 சதவீதம் வரை உயரபோகுது..! நகைப்பிரியர்களுக்கு அடுத்த ஷாக்

இந்தியாவில் தங்க விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனால் நகை வாங்குவதா அல்லது விலை குறையும் வரை காத்திருப்பதா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

அதே நேரத்தில் தங்கத்தின் மீதான மோகம் தொடரும் என்றும், வரும் 7 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 229 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும் சர்வதேச தங்க தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன.

தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமை காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என கூறப்பட்டுள்ளது.

Related News

Latest News