14.05.2026; தொடர்ந்து விலை உயர்ந்து வரும் தங்கம்… இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த 9 சதவீத வரி உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், அதன் தாக்கம் உடனடியாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் பிரதிபலித்துள்ளது. குறிப்பாக தங்கத்தின் விலை ஒரே நாளில் கணிசமாக உயர்ந்ததால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.14.330-க்கும், ஒரு சவரன் ரூ.1.14.640-க்கும் விற்பனையாகியது. ஆனால் இறக்குமதி வரி உயர்வு அமலுக்கு வந்ததையடுத்து நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.8,560 உயர்வு ஏற்பட்டது.

அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.1,070 அதிகரித்து ரூ.15.400-க்கும், ஒரு சவரன் ரூ.1.23.200-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1.20.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.15.050-க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.5,760 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் வெள்ளி விலையில் இன்று சற்று சரிவு காணப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.315-க்கும், பார் வெள்ளி ரூ.3.15.000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

Related News

Latest News