ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஒரு நாள் உயர்வதும் மற்றொரு நாள் சற்று குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 11 நாட்களாக தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்து ஷாக் கொடுத்துள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதியான நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,180க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,440க்கும் விற்கப்பட்டது.
அந்த வகையில் இன்று அதாவது, ஆகஸ்ட் 21ம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,230க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, 18 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,630க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.61,040 விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றங்களை சந்திக்கும். உலகப் பொருளாதார நிலைகள், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்தின் முடிவுகள், அமெரிக்க டாலரின் மதிப்பு, மற்றும் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல் நடவடிக்கைகள் ஆகியவை இதன் விலையை நிர்ணயிக்கின்றன.
இப்படிப்பட்ட காரணங்களால், முதலீட்டாளர்கள், சந்தை நிலவரங்களை கூர்ந்து கவனித்து, தங்கள் முதலீட்டு இலக்குகளுக்கு ஏற்பத் தகுந்த நேரத்தில் முடிவெடுப்பது புத்திசாலித்தனம் என்று நிதி ஆலோசகர்களால் அறிவுறுத்தப்படுகின்றனர்.