தங்கம் விலை உயர்வு

267

சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து, 4 ஆயிரத்து 689 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரனுக்கு 104  ரூபாய் உயர்ந்து, 37 ஆயிரத்து 512 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி 62 ரூபாய் 80 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 62 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக சரிந்து வந்த நிலையில், மீண்டும் அதிகரித்துள்ளதால் தங்கம் வாங்குவோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.