தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் கடந்த 26-ந்தேதியில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ.8,360-க்கும், ஒரு சவரன் ரூ.66,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,425-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.67,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.