ஏணி வைத்து எட்டாத உயரமாக இருந்தாலும் ஆடுகளுக்கு
கவலையில்லை.
தன் இரை எங்கிருந்தாலும் சென்று உண்ணும்
சாமர்த்தியம் ஆடுகளுக்கு உண்டு என்பதற்கும், ஆடுகள் நன்கு சிந்திக்கின்றன
என்பதற்கும் இந்த வீடியோ ஓர் உதாரணம்.
வெள்ளாடு ஒன்று உண்ட களைப்பில் படுத்திருக்க, மற்றோர் ஆடு
பசியால் தவித்திருக்கிறது. தனக்கான ஃபிரஷ் இலைதழை
மரத்திலிருப்பதைப் பார்த்த ஆடு, எஜமான் இல்லையே என்று
கவலைப்படவில்லை.
ஏறிப் பறித்துத் தின்ன ஏணி இல்லையே என்று கவலைப்படவும் இல்லை.
சில விநாடிகள் சிந்தித்தது. சட்டென்று சமயோசிதமாக செயல்பட்டது.
மரத்தில் கட்டப்பட்டிருக்கும் எருமை மாட்டின்மீது தாவிக் குதித்து
வசதியாக நின்றபடி, மரத்திலுள்ள இலைகளைத் தின்று தன் பசியைப்
போக்கிக்கொள்கிறது இந்த வெள்ளாடு.
வெள்ளாடு இலை தழைகளையே பிரதானமாக உண்ணும்.
வெள்ளாட்டுப் பால் குடல் புண்ணைக் குணமாக்கும்.
ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டில் மரத்தில் ஏறி மேயும்
ஆடுகள் உள்ளன.
இயல்பாகவே மலை உச்சி, செங்குத்தான பாறைகள் போன்றவற்றின்மீது
ஏறிநின்று மேயும் திறன் ஆடுகளுக்கு உண்டு. இதுபோன்ற உயரமான
இடங்களில் ஏறிநின்று மேயும் திறமை மாடுகளுக்கோ, குதிரைகளுக்கோ
மற்ற கால்நடைகளுக்கோ கிடையாது.
என்ன செஞ்சு என்ன பிரயோஜனம்….கசாப்புக் கடைக்குப் போறதிலிருந்து
ஆடுகளால தப்பிக்க முடியலயே….