Monday, January 19, 2026

பக்ரீத் பண்டிகை : ராணிப்பேட்டை வாரசந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ராணிப்பேட்டை வாரசந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிகப்பெரிய சந்தையாக விளங்கும் ராணிப்பேட்டை வாரச்சந்தையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், இன்று வியாபாரம் களைகட்டியது. சந்தையில் இரண்டு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related News

Latest News