அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு அட்டூழியங்களால் உலக நாடுகள் கொதித்து போய் இருக்கின்றன. பிரேசில் மீது 50 சதவீத வரி போட்ட டிரம்ப் இந்தியா மீதும் 50 சதவீதம் வரிவிதித்து இருக்கிறார். இதனால் இந்தியாவில் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வேலையை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே அமெரிக்காவின் அராஜகத்தை எதிர்க்கும் நோக்கில் சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து உள்ளன. டிரம்பின் வரிவிதிப்பு குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, ” பிற நாடுகளைக் கட்டுப்படுத்த வரியை ஆயுதமாகப் பயன்படுத்துவது ஐ.நா சாசனம் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் சட்டங்களை மீறுவது ஆகும்.
மேலும், இது நியாயமற்றது மற்றும் நீண்ட காலத்திற்கு இது பயனளிக்காது,” என்று டிரம்புக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். இந்தநிலையில் அமைச்சரின் சமூக வலைதள பதிவை மேற்கோள் காட்டி, இந்தியாவின் சீன தூதர் சு ஃபெய்ஹாங், ” ஒரு அங்குலம் இடம் கொடுத்தால் ஒரு மைல் தூரம் செல்வான்,” என்று காட்டமாக விமர்சித்து உள்ளார்.
அமெரிக்காவிற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து வருகின்றன. இது சர்வதேச அரசியலில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்த போகிறது? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.