சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இணைய போகிறார் என்பது தான், IPL தொடரின் லேட்டஸ்ட் Hot Topic. அணிக்கு வலிமை சேர்க்கக்கூடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை என்பதால், ராஜஸ்தான் அணியிடம் சஞ்சு சாம்சனுக்காக CSK மல்லுக்கட்டி வருகிறது.
அணிக்குள் வெட்டு, குத்து கலவரங்கள் நடப்பதாலும், அடுத்த கேப்டனை அறிவிக்க வேண்டி இருப்பதாலும் சாம்சனுக்கு டாட்டா காட்ட ராஜஸ்தானும் தயாராகி விட்டதாம். இதனால் வீரர்களை மாற்றிக் கொள்ளும் Trading முறையில், ராஜஸ்தான் சாம்சனை சென்னைக்கு விற்கலாம் என்று தெரிகிறது.
முன்னதாக அஸ்வின், சிவம் துபே இருவரையும் ராஜஸ்தான் கேட்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இருவரும் ஏற்கனவே அந்த அணிக்கு விளையாடியவர்கள் என்பதால் இருவரையும் விட்டுக்கொடுக்க CSK ஓகே சொன்னதாம். இருவரின் மொத்த விலை 21 கோடியே 75 ரூபாய்.
இதனால் கையில் இருந்து ராஜஸ்தான், 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியது இருக்கும். இந்தநிலையில் சாம்சனுக்கு 18 கோடி ரூபாய் கொடுத்திருப்பதால், பதிலுக்கு அதற்கு சமமான வீரரான ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் கேட்கிறதாம். ஜடேஜாவும் அதே 18 கோடி ரூபாய்க்கு தான் சென்னையால் தக்க வைக்கப்பட்டார்.
இதனால் இருபக்கமும் எந்தவித சிக்கலும் இருக்காது என்பது, ராஜஸ்தானின் எண்ணமாக உள்ளது. ஜடேஜா அறிமுக IPL போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறார். அத்துடன் கடந்த 2 சீசன்களாக சென்னையில், அவரது பெர்பாமன்ஸ் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எனவே சாம்சனுக்கு மாற்றாக ஜடேஜாவை CSK விட்டுக்கொடுக்க, வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.