உக்ரைன் குழந்தைகளை தாயிடம் ஒப்படைத்த பெண்

281
Advertisement

உக்ரைன் எல்லையில் , தனது இரு பிள்ளைகளை பெண் ஒருவரிடம் ஒப்படைத்த தந்தை , பிள்ளைகளை எல்லையை கடந்து அவர்களின் தாயிடம் பத்திரமாக ஒப்படைத்த பெண்ணின் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நடைபெற்று வருவதால் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளிடம் உதவி கோரிய உக்ரைனிக்கு பல நாடுகள் உதவ முன் முன்வந்துள்ளது.

இந்நிலையில் , உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றிய ரஷ்யாவை எதிர்த்து , உக்ரைன் தொடர்ந்து போராடி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உக்ரனை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மேலும் உக்ரையில் 18 முதல் 60 வயது வரையிலான ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துஉள்ளது. இந்நிலையில் ,தன் இரு பிள்ளைகளுடன் எல்லை பகுதிக்கு வந்த ஒரு நபர் , தான் வெளியேற அனுமதி இல்லாததன் காரணமாக பிள்ளைகளை அங்கு எல்லையை கடக்கவிருந்த பெண் ஒருவரிடம் ஒப்படைத்து , தன் மனைவி ” பிள்ளைகளை கூட்டி செல்ல இத்தாலியில் இருந்து வந்துகொண்டு இருக்கிறாள் எனவும் ,இரு பிள்ளைகளின் பாஸ்போர்ட்கள் , மற்றும் மனைவியின் தொலைபேசி எண்னையம் அந்த பெண்ணிடம் குடுத்து அனுப்பினார்.

பின் , எல்லையை கடந்து பாதுகாப்பான முகாமில் இரு பிள்ளைகளை தன் பிள்ளைகளை போல் பாதுகாத்து ,அவர்களின் தாயிடம் ஒப்படைதார் அந்த பெண் . முகாம் பகுதிக்கு வந்த குழந்தைகளின் தாய் ,அந்த பெண்ணை கட்டித்தழுவி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.இந்த நிகழ்வு தாயின் அன்பு மற்றும் அரவணைப்பை வெளிப்படுத்துகிறது.