Tuesday, April 29, 2025

இரண்டு மின்சார இரயிலின் இடையில் தவறி விழுந்த இளம்பெண்- மனதை  பதறவைக்கும் காட்சி !

“படியில் பயணம் நொடியில் மரணம்” இது பஸ்சில் பயணிப்பவர்களுக்கு  மட்டும் அல்ல இரயிலில் பயணிப்பவர்களுக்கும் பொருந்தும் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

முகநூலில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் மின்சார இரயிலின் படியில் நின்றபடி பயணம் செய்கிறார்.ஒரு கட்டத்தில் படியின் ஓரத்தில் நின்றபடி உடையை சரிசெய்வது, கூந்தலை சரிசெய்துகொண்டு இருந்தார்.

அந்நேரம் எதிரே மற்றொரு இரயில்  அதிவேகமாக கடந்துசெல்ல,பாதி உடல் வெளியில் இருந்தபடி படியில் நின்றுகொண்டு இருந்த அந்த பெண் ஒரு நொடியில் நிலைதடுமாறி,படியிலிருந்து கீழே விழுகிறார்.இதனை கவனித்துக்கொண்டு பெண்ணின் அருகே நின்றுகொண்டிருந்த  நபர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணின் உடையை இறுக்கப்பிடித்துக்கொள்ள அந்த பெண்ணை மேலே இழுத்துவிடுகின்றனர்.

சில வினாடியில் மரணத்தின் வாசலை தொட்டுவந்தது போல் உள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest news