வீரமரணமடைந்த  ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’

312
Advertisement

உக்ரைன்  மீது ரஷ்ய படையின் இராணுவ நடவடிக்கை தொடங்கிய முதல் தாளிலிருந்தே ரஷ்ய படைக்கு சிம்மசொப்பனமாய் திகழ்ந்த உக்ரைனின் மேஜர் தாராபால்கா வீரமரணமடைந்ததாக  தாவல் வெளியாகியுள்ளது.

போரில்  40 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரேனிய போர் விமானியான ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ போரில் இறந்ததாக லண்டனின் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 24 அன்று தொடங்கிய உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து தனது துணிச்சலுக்காக புகழ் பெற்றவர்  உக்ரைன் விமானி மேஜர் தாராபால்கா.

மேஜர் தாரபால்காவின் போர் விமானம் மார்ச் 13 அன்று , அவர் பெரும் எண்ணிக்கையிலான எதிரிப் படைகளைச் சமாளிக்கும் போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது. மேஜர் தாராபால்காவின் கண்ணாடி மற்றும் ஹெல்மெட் இப்போது ஏலம் விடப்பட உள்ளன எனவும் தாவல் வெளியாகியுள்ளது.

ஸ்டீபன் தாராபால்கா மேற்கு உக்ரைனில் உள்ள கொரோலிவ்கா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.சிறுவயதில் இருந்தே போர் விமானி ஆக வேண்டும் என்பது அவரது கனவாக உருந்துள்ளது.

உக்ரைன் ரஷ்ய இடையே போர் தொடங்கிய முதல் நாளிலையே 6 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினார் மேஜர் தாராபால்கா.உக்ரைன் மக்கள் இவருக்கு வைத்த பெயர்  ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ அதாவது

” கீவின் பேய் “. இவர் இந்த போரின் போது 40 ரஷ்ய போர் விமானங்களைவீழ்த்தியதாகவும் மார்ச் 13 அன்று நடந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.