Saturday, January 18, 2025

கஜினி பட ஸ்டைலில் ….. தோசை சாப்பிட்ட மனிதர்

கஜினி படத்தில் தனது நித்ய பழக்க வழக்கங்களையே மறந்துவிடும்
கதாநாயகன் சூரியா, செல்போனில் படம் பிடித்து வைத்திருப்பார்.
அதைப்போலவே, அயல்நாட்டவர் ஒருவர் தோசை சாப்பிடுவதை
செல்போனில் தெரிந்துகொண்டு சாப்பிட்டு மகிழ்வது வைரலாகி வருகிறது-

இந்தியர்களின் உணவைப் பிரபலப்படுத்தியதுபோல, அவற்றை
சாப்பிடுவதற்கும் அயல்நாட்டினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

இந்தியர்களின் உணவு வகைகள்மீது அயல்நாட்டினருக்குக்
கொள்ளைப் பிரியம். அதுவும் தமிழர்களின் உணவு வகைகளுள்
ஒன்றான தோசைமீது அலாதிப் பிரியம் அநேகம் பேருக்கு உண்டு.

ஆனால், ஸ்பூன் மற்றும் போர்க்குகளால் சாப்பிடும்
வழக்கம்கொண்ட அயல்நாட்டினருக்கு தோசை சாப்பிடுவது
எவ்வளவு சிரமமாக உள்ளது என்பதைப் பாருங்கள்.

Latest news