ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்துவமாக உற்பத்தியாகக் கூடிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லிகை, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளன
இந்த வரிசையில் தற்போது கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு முதல்முறையாக புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.