பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்த கொலை வழக்கு குற்றவாளி சந்தன் மிஸ்ரா மருத்துவ காரணங்களால் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சந்தன் மிஸ்ரா மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை 5 பேர் கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் புகுந்து சந்தன் மிஸ்ராவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். காயமடைந்த சந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாட்னா காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
சந்தன் மிஸ்ரா மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ள நிலையில், பழிக்குப் பழியாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.