சிதம்பரம் அருகே கடற்கரையில் பெண்கள் உள்ளிட்டோரை தாக்கிய கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர் .
கடலூர் மாவட்டம், சிதம்பரம் கடற்கரையில் குளிக்க சென்ற குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பவானி, முத்து, சத்தியமூர்த்தி உள்ளிட்ட 7 பேர் நேற்று கடலில் குளித்துவிட்டு கரை திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது, மதுபோதையில் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் மதுபோதையில் அவதூறாக பேசி தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், புதுச்சத்திரம் போலீசார் தானாக முன்வந்து தினேஷ் என்பவரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மாணிக்கவேல், தினேஷ், முத்துலிங்கம், பிரவீன் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.