செல்போன்வாசிகளின் பெருங்கவலையே பேட்டரி
தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்பதுதான்.
செல்போன்தான் உலகம் என அதிலேயே மூழ்கிக்கிடக்கும்
இன்றைய இளைஞர்களுக்கு வரமாக அமைந்துள்ளது சீனாவின்
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன்.
இதற்காக 160 வாட் அல்ட்ரா பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை
கான்செப்ட் 2021 மாடல் போனில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த செல்போனில் 4 ஆயிரம் மெகா ஆம்பியர் திறன்கொண்ட
பேட்டரி உள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி
சார்ஜ் ஏற்றும்போது செல்போன் வெப்பம் அதிகரிக்கவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
8 GB RAM, 128 GB STORAGE வசதிகளுடன் 64 MP
கொண்ட கேமராவும் இதில் உள்ளது.
எப்போது இந்த போன் விற்பனைக்கு வரும் அல்லது இருப்பு
எவ்வளவு உள்ளது என்பது பற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை.