Sunday, December 22, 2024

ஒரு நாளைக்கு 36,000 சம்பளம்..ஆனா வேலைக்கு தான் ஆள் இல்லையாம்!

மாசம் பத்தாயிரம் ரூபா சம்பளம், ஆனா நடுக்கடல்ல கப்பல் நின்னுட்டா, கடல்ல இறங்கி தள்ளனும்னு ‘சேதுபதி IPS’ படத்துல வர கவுண்டமணி செந்தில் காமெடி மாதிரி ஸ்காட்லாந்துல உண்மையாவே ஒரு சம்பவம் நடந்திருக்கு.

ஒரு நாளைக்கு 36,000 சம்பளம், மாசத்துக்கு 4 லட்சம், ரெண்டு வருஷம் தொடர்ந்து வேலை செஞ்சா உடனே ஒரு கோடியாக சம்பள உயர்வுன்னு சலுகைகளை அள்ளி வீசினாலும், இந்த வேலை வாய்ப்பை அறிவித்து 24 நாள் ஆகியும் ஒருத்தர் கூட வேலைக்கு விண்ணப்பிக்காம இருக்க, weightஆ ஒரு காரணம் இருக்கு.

கடலுக்கு நடுவுல கட்டப்படுற ஒரு அமைப்புக்குள்ள இருந்துட்டு கடல்ல இருந்து எடுக்கப்படுற எண்ணெய் மற்றும் வாயுக்களை நிலத்துக்கு கொண்டு வர வரைக்கும் பத்திரமா store பண்ணி வைக்குறதுதாங்க வேலையே. இப்ப தெரியுதா எதுக்கு இந்த வேலைக்கு யாருமே வர மாட்டிக்குறாங்கன்னு!

Latest news