Friday, January 24, 2025

எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த 1999 முதல் 2004ஆம் ஆண்டு வரை கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா.

இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுற்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் : எஸ்.எம்.கிருஷ்ணா தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் மற்றும் இந்திய அரசியலில் தலைசிறந்தவர்.

கர்நாடக முதல்வராக, வெளியுறவு அமைச்சராக நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் எஸ்.எம்.கிருஷ்ணா.

எஸ்.எம்.கிருஷ்ணாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Latest news