இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானர். அவருக்கு வயது 84. கஸ்தூரி ரங்கன் 1994 முதல் 2003 ஆம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் தலைவராக இருந்தார். மேலும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். பத்ம விபூஷன் விருதும் பெற்றுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக, அவரது வீட்டில் இன்று உயிரிழந்தார். நாளை அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.