போருக்கு மத்தியில் வீராங்கனைகளுக்கு
அழகிப் போட்டி நடத்திய ரஷ்யா

51
Advertisement

ரஷ்யா- உக்ரைன் போருக்கு மத்தியில் இராணுவ
வீராங்கனைகளுக்கு ரஷ்யா அழகிப்போட்டி நடத்தி
அதிரவைத்துள்ளது.

பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போரைத்
தொடங்கிய ரஷ்யா தொடர்ந்து தாக்கிவருகிறது.
இந்த நிலையில் தனது நாட்டு போர் வீராங்கனை
களுக்கிடையே அழகிப்போட்டி நடத்தி உலக
நாடுகளைத் மறுபடியும் திரும்பிப் பார்க்க வைத்தது.

Make up under camouflage என்ற தலைப்பில்
நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் ஏவுகணை வீராங்கனைகள்
உள்பட அனைத்துப் பிரிவையும் சேர்ந்த 40 வீராங்கனைகள்
கலந்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது..

Advertisement

முதல் சுற்றில் மேக் அப் மற்றும் அதன் பயன்பாடு பற்றி
போட்டி நடத்தப்பட்டுள்ளது. அடுத்த சுற்றில், கதிரியக்கம்,
ரசாயன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வாயு முகமூடிகள்,
சிறப்புப் பாதுகாப்பு உடைகளுடன் ஏகே 74 ரகத் துப்பாக்கிகளைத்
தாங்கிய ஆடைகளை அணிந்து போர்ச்சூழலுக்குள் நுழைவது
போன்று போட்டி நடத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக, பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
பின்னர், சமையல் போட்டிகளும் நடத்தப்பட்டதாம்.

இந்தத் தகவல்களை ராணுவ இதழான ரெட் ஸ்டார் தெரிவித்துள்ளது.

இக்கட்டான சூழலில் ரஷ்யாவின் இந்தச் செயல் கடும் விமர்சனத்துக்கு
உள்ளாகி வருகிறது.