பறக்கும் ஆமை

231
Advertisement

தங்க நிற ஆமை பறக்கும் வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது.

என்னது ஆமை பறக்குதா என்று அதிர்ச்சி அடையாதீர்கள்.
இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று
அப்படியொரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாருங்கள் அது உண்மையா என்பதைப் பார்க்கலாம்.

அந்த வீடியோவில் ஒருவரின் கைவிரல்களில் ஆமைபோன்ற
தோற்றம்கொண்டுள்ள தங்க நிறத்தினாலான மிகச்சிறிய
3 பூச்சிகள் ஊர்ந்துசெல்கின்றன.

தோற்றத்தில் ஆமையின் உருவத்தை ஒத்திருந்தாலும்
அளவில் மிகச்சிறியதாக உள்ளதால் வலைத்தள அன்பர்கள்
பலர் அது ஆமை என்றே வேடிக்கையாகக் குறிப்பிடத்
தொடங்கியுள்ளனர்.

என்றாலும், கை விரல்களிலிருந்து பறக்கத் தொடங்கியதும்
ஆச்சரியமடைந்த பலர் அது தங்கப் பூச்சி என்று வர்ணிக்கத்
தொடங்கினர்.

இவை சாரிட்டோடெல்லா செக்ஸ்பங்க்டாடா (Charidotella
sexpunctata) என்னும் பூச்சி இனத்தைச் சேர்ந்த வண்டுகள்
என்று விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மார்னிங் குளோரி இலைகளையும் இனிப்பு உருளைக்கிழங்கு
களையும் சாப்பிட்டு வாழும் இந்த தங்க ஆமை வட அமெரிக்
காவைத் தாயகமாகக் கொண்டவை என்றும் அவர்கள் குறிப்
பிட்டுள்ளனர்.

முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும் இந்த தங்க ஆமை வண்டுகள்
பிற விலங்குகளின் மலம் அல்லது தோலில் ஒட்டிக்கொண்டு
இரண்டே வாரங்களில் பெரியதாக வளர்கின்றன.

ஆக, ஆமை என்பது பொய், வண்டு என்பதே மெய்.