https://www.instagram.com/reel/CWQBnowAwEY/?utm_source=ig_web_copy_link
சாலையோர உணவகத்தில் சமைத்த உணவை சாலையின் மறுபுறம் உள்ளவருக்கு உயரமாகத் தூக்கியெறிந்து சப்ளை செய்யும் வீடியோ இணையத்தில் வலம்வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு சமையல் கலைஞர் சாலையோரத்தில் உள்ள Gas அடுப்பில் சமைக்கிறார். சமைத்து முடித்ததும் கடாயிலுள்ள அந்த உணவை சாலையின் மறுபுறத்தில் பல மீட்டர் தொலைவிலுள்ள ஒருவருக்கு லாவகமாக உயரே தூக்கி வீசுகிறார். அது சரியாக சாலையின் மறுபுறம் உள்ளவரின் தட்டில் விழுகிறது,
தெருவோர உணவு வியாபாரியின் இந்த அபாரத் திறமை அனைவரையும் கவர்ந்து வருகிறது.
வியப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வியாபாரியின் செயல் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது.
அடுப்பறையில் பாதுகாப்பான முறையிலும் சுகாதாரமான முறையிலும் சமைக்கப்பட்டு அன்போடு பரிமாறப்படும் உணவு எங்கே, ஏதோ வேண்டாத ஒரு பொருளைத் தூக்கி வீசுவதுபோல எறியப்படும் உணவு எங்கே… என்று கடுமையான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.