Friday, July 4, 2025

Trail ரூம்ல கேமரா இருக்கான்னு கண்டுபிடிக்கும் 5 முறைகள்!

பொதுவாக துணிக்கடைகளுக்கு செல்லும் போது, நாம் தேர்ந்தெடுத்த உடை சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க Trial ரூம் அவசியம்.

ஆனால், அப்படிப்பட்ட ட்ரையல் ரூம்களில் கேமெராக்கள் பொருத்தப்பட்டு இருக்குமோ என்ற அச்சம் அவ்வப்போது எட்டி பார்ப்பதுண்டு.

முதலில் ட்ரையல் ரூமில் உள்ள கண்ணாடியை தொட்டு பார்க்க வேண்டும். சாதாரண கண்ணாடியில் விரலுக்கும் விரல் பிம்பத்திற்கும் சிறு இடைவெளி காணப்படும்.

2 way mirror ஆக இருந்தால் ஒட்டாது. அப்படி தெரிந்தால், அது வேவு பார்க்கும் கண்ணாடி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ட்ரையல் ரூமின் லைட் off செய்துவிட்டு, mobile flashlight கொண்டு பார்த்தால், அறையில் கேமெரா இருந்தால் கண்டுபிடித்துவிடலாம்.

ட்ரையல் ரூமில் மட்டும் மொபைல் சிக்னல் கிடைக்கவில்லை என்றால், கேமெரா பொருத்தப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. கேமெராக்கள் இயங்க wifi சிக்னல் தேவைப்படும். எனவே, மொபைலில் wifi settingsஐ on செய்து அங்கு கிடைக்கும் connection உடன் இணைய முடிகிறதா என பார்க்கவும். பின், அதே wifiயை பயன்படுத்தி வேறு deviceகள் இயங்குகின்றனவா என்பதை கண்டறியும் app உபயோகித்து பார்க்கும் போது கேமரா நிறுவனங்களின் பெயர்கள் அடிபட்டால், கேமரா பொருத்தபட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

இது மட்டுமில்லாமல், கண்களின் இருபுறமும் வெளிச்சம் புகாத வாறு கைகளை வைத்து மறைத்து கொண்டு, கண்ணாடியை உற்று பார்த்தாலே அந்த பக்கம் இருப்பது என்ன அல்லது கேமரா இருக்கிறதா என்பதை கண்டுபிடித்துவிடலாம். இனி இந்த அஞ்சு testஎ செஞ்சு பாத்துட்டு நிம்மதியா dress மாத்துங்க.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news