ஜூஸ் குடிச்சா நல்லது தான்..ஆனா இப்படி குடிச்சா ஆபத்து!

191
Advertisement

செயற்கையான குளிர்பானங்களுக்கு பதிலாக பழங்களை வைத்து தயாரிக்கப்படும் fresh juice ஆரோக்கியமான தேர்வாக பார்க்கப்படுகிறது.

ஆனால், பழச்சாற்றை தவிர்க்க வேண்டிய சில தருணங்களை இப்பதிவில் பார்ப்போம்.

காலையில் எழுந்த உடன் பழச்சாறு பருகுவது கணையத்திற்கு அதிக வேலை கொடுக்கும்.

அது மட்டுமில்லாமல், அமிலத்தன்மை அதிகம் இருக்கும் வெறும் வயிற்றில் எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களில் இருந்து சென்று சேரும் சிட்ரிக் அமிலம் அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

பழச்சாறு குடித்து விட்டு உடனே உடற்பயிற்சி செய்ய கூடாது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன் அல்லது உடற்பயிற்சி செய்து அரை மணி நேரம் கழித்து தான் ஜூஸ் குடிக்க வேண்டும்.

விமானத்தில் பயணம் செய்வதற்கு முன் பழச்சாறு குடிப்பது, பயணத்தின் போது அசௌகரியத்தை ஏற்படுத்தும். படுக்க செல்லும் முன் பழச்சாறு குடிப்பதால் தூக்கமின்மை, உடல் பருமன் சிக்கல்கள் உருவாகும்.

பழத்தை சாறாக்கும் போது சக்கரை நோயாளிகளுக்கு அதிகம் தேவைப்படும் நார்ச்சத்து இழக்கப்படுகிறது.

பழத்தை விடவும் பழச்சாறு அதிக சக்கரையை உடனே ரத்தத்தில் கலப்பதால் நீரிழிவு நோயாளிகள் பழச்சாறு அருந்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறும் உணவியல் நிபுணர்கள், சமச்சீரான உணவின் பகுதியாக பழச்சாறுகளை சரியான சமயத்தில் எடுத்து கொள்ள அறிவுறுத்துகின்றனர்.