‘நானே வருவேன்’ படம் ஏன் பாக்கலாம் – ஐந்து காரணங்கள்

349
Advertisement

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படம் வெளியாகி பெரும்பான்மை ரசிகர்களின் வரவேற்பையும், குறிப்பிடத்தக்க அளவு விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படமாக நானே வருவேன் கொண்டாடப்படுவதற்கு ஐந்து காரணங்கள் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்ததும் இல்லாமல், அதில் ஒரு கதாபாத்திரம் முன்னெப்போதும் இல்லாத வில்லனை காட்டி இருப்பதும், படம் வெற்றி பெற்றாலும் இல்லையென்றாலும் தனித்துவம் காட்டும் செல்வராகவனின் இயக்கமும் சினிமா ஆர்வலர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

தேஜாவு conceptஐ மையமாக கொண்ட psychological thrillerஆக இருக்கும் நானே வருவேன், புதுமையான கதைக்களங்களை விரும்புவோருக்கு விருந்தாக அமையும்.

எப்போதும் போல தனக்கே உரிய பாணியில் BGM போட்டுள்ள யுவனின் இசை படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. மேலும், ரெண்டே கால் மணி நேரம் மட்டுமே உள்ள படம் என்பதால், கண்டிப்பாக அதிகமான சினிமா ஆர்வலர்கள் படத்தை பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்டுகிறது.