Sunday, February 16, 2025

சும்மா தக தகன்னு மின்னுற பொலிவான சருமம் வேணுமா? இந்த 5 பழங்களை சாப்பிடுங்க

நாம் சாப்பிடும் உணவுகளின் உட்பொருட்கள் தான் நம் சரும ஆரோக்கியத்தை நிர்ணயம் செய்கிறது.

சருமம் பொலிவாகவும் மிருதுவாகவும் இருக்க கொலாஜன் மிகவும் அவசியம். இயற்கையாக கொலாஜனை அதிகரிக்க செய்யும் பழங்களை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி,black பெர்ரி மற்றும் blueberry வகை பழங்களில் கொலாஜன், விட்டமின் C மற்றும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும் எலாஜிக் அமிலமும் உள்ளது.

விட்டமின் C அதிக அளவில் உள்ள ஆரஞ்சுகளை சாப்பிடுவதால் சருமம் உள்ளிருந்து பொலிவை பெறுவதோடு, சுருக்கங்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்படுகிறது.

Butter Fruit என அழைக்கப்படும் அவோகேடோ பழத்தில் உள்ள மூன்று அமிலங்கள் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

Grapefruit என கூறப்படும் இந்த பழம் நாம் அறிந்த திராட்சை பழம் இல்லை. சாத்துக்குடி போல பெரிதாக இருக்கும் இந்த பழத்தில் உள்ள அதிகப்படியான விட்டமின் C, சருமத்துக்கு ஊட்டம் தரக்கூடிய ஹயாலுரோனிக் அமிலத்தை அளிப்பதால் உடலில் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கிறது.

சர்வ சாதாரணமாக கிடைக்க கூடிய எலுமிச்சை பழம் பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்து, சருமத்துக்கு புதுப்பொலிவை அளிக்கிறது.

சுருக்கங்கள், சோர்வுகளை போக்கி இளமையான தோற்றத்தை அளிக்கும் எலுமிச்சையை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கும் உணவியல் நிபுணர்கள், சீரான உனவுப்பழக்கத்தை கைக்கொள்வது சிறப்பான சரும ஆரோக்கியத்தை பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என கருத்து தெரிவிக்கின்றனர்.

Latest news