கால்பந்து விளையாட்டில் கலக்கும் மீன்கள்

280
Advertisement

கால்பந்து விளையாடும் மீன்கள் பற்றிய வீடியோ சமூக
வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது..

நிலத்தில் விளையாடப்படும் கால்பந்து விளையாட்டை நீருக்குள்
வாழும் மீன்களுக்குப் பயிற்சியளித்துள்ளார் சீனாவில் கால்பந்து
விளையாட்டை நேசிக்கும் அன்பர் ஒருவர்.

நீர் நிரப்பப்பட்டுள்ள சிறிய கண்ணாடித் தொட்டிக்குள் பச்சை
நிறத்தில் கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மைய
வட்டத்தில் கால்பந்தை இட்டதும் துள்ளிவந்து மீன்கள் தங்கள்
தலையால் முட்டிக் கடத்திச் செல்கின்றன.

Goal postக்குள் பந்து சென்று கோல் விழுந்ததும் மகிழ்ச்சியில் திரும்பி
வருகின்றன.
கால்பந்து வீரர்களாக மாறிய மீன்கள் பற்றிய இந்த வீடியோ
பழைய வீடியோ என்றபோதிலும் தற்போது வைரலாகி வருகிறது.