இன்னைக்கு பட்ஜெட்ல இத கவனிச்சீங்களா? 1947ல இருந்து இப்ப தான் முதல் முறையா நடக்குது!

212
Advertisement

2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வழக்கம் போலவே ஆளும் மத்திய அரசை ஆதரிக்கும் கட்சிகள் பட்ஜெட்டின் நிறைகளை பேசி வர, எதிர்க்கட்சிகள் குறைகளை கோடிட்டு காட்டி, எதிர்ப்புக்கொடியை தூக்கி பிடித்து வருகின்றனர்.

எது எப்படியோ, இதை யாரெல்லாம் கவனிச்சீங்க என நெட்டிசன்கள் ஒருபுறம் பதிவு செய்த கருத்து கவனம் ஈர்த்து வருகிறது.

1947ஆம் ஆண்டு இந்திய நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து ஒரு பெண் ஜனாதிபதி தலைமையில், ஒரு பெண் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்வது இதுவே முதல் முறை என குறிப்பிட்ட பல பதிவுகளை சமூகவலைதளங்களில் பார்க்க முடிந்தது. அரசியலை தாண்டி இந்த நிகழ்வில், நாட்டு வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை பார்க்க முடிவதாக சமூகஆர்வலர்கள்  கருத்து தெரிவிக்கின்றனர்.