Saturday, July 12, 2025

ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் வீரர்

ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற சாதனையை அயர்லாந்து வீரர் கர்டிஸ் கேம்பர் படைத்துள்ளார்.

அயர்லாந்தில் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கர்டிஸ் கேம்பர் என்ற வேகப்பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக 5 பந்துகளில் 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

அவர் தனது 2-வது ஓவரின் கடைசி இரு பந்தில் 2 விக்கெட்டும், 3-வது ஓவரின் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட்டும் சாய்த்தார். இதன்மூலம் கர்டிஸ் கேம்பர் 5 பந்தில் 5 விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news