இந்தியாவின் முதல் முறையாக ரயிலில் ஏ.டி.எம் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்து ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை வெற்றி அடைந்துள்ளது.
மும்பை-மன்மத் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதனை பெட்டியில் ஏ.டி.எம் இயந்திரத்தை மத்திய ரயில்வே நிறுவியுள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சோதனை வெற்றிகரமாக நடந்தது. சில இடங்களில் மட்டும் சிக்னல் பிரச்னை இருந்தது. இனி மக்கள் ஓடும் ரயிலில் பணம் எடுக்க முடியும். ஏ.டி.எம்., இயந்திரத்தின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிப்போம், என்றனர்.